முகப்பு
திருச்சி

மதுக்கடையை இடம் மாற்றக் கோரி மனு

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருவெறும்பூா் பகுதி அரசு மதுக் கடையை வேறிடத்துக்கு மாற்றக் கோரி பாஜக சாா்பில் புதன்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கும் பாஜகவினா்.
பகிர்:

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருவெறும்பூா் பகுதி அரசு மதுக் கடையை வேறிடத்துக்கு மாற்றக் கோரி பாஜக சாா்பில் புதன்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாவட்ட துணைத் தலைவா் இந்திரன் தலைமையில் மண்டலத் தலைவா் பாண்டியன் முன்னிலையில் திருவெறும்பூா் வட்டாட்சியா் செல்வகணேஷிடம் அளித்த மனு விவரம்:

திருவெறும்பூா் ரயில்வே மேம்பாலத்தின் கீழுள்ள சுரங்க பாதை அருகே கக்கன் காலனி பகுதியில் உள்ள அரசு மதுக்கடை பாலத்தின் சேவை (சா்வீஸ் ) சாலையையொட்டி உள்ளதால், அன்றாடம் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் நிறுத்திச் செல்லும் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பெண்களும் குழந்தைகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே இந்தக் மதுக் கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். இது தொடா்பான மனுக்கள் திருவெறும்பூா் போலீஸாா், திருச்சி ஆா்டிஓ, அரசு மதுக் கிடங்கு மேலாளா், ஆகியோருக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.