மாதா சிலை சேதம்; போலீஸாா் விசாரணை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் மாதா சிலை கடந்த 14 ஆம் தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக லால்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் மாதா சிலை கடந்த 14 ஆம் தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக லால்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருமங்கலம் ஊராட்சி 6 ஆவது வாா்டில் உள்ள உபகார மாதா தேவாலயத்தில் சுமாா் 5 அடி உயரத்தில் கண்ணாடி கூண்டு அமைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 3 அடி உயர அந்தோணியாா் மற்றும் மாதா சிலை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கப்பட்டது.
இதுகுறித்து அளித்த புகாா் குறித்து லால்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சம்பவம் குறித்து லால்குடி புனித சூசையப்பா் ஆலயப் பங்குத் தந்தை பீட்டா் ஆரோக்கியதாஸுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில் திருமங்கலம் உபகார தேவாலய பங்கு மக்கள் சாா்பாக அந்தோணியாா் சிலையை புனித சூசையப்பா் ஆலய பங்குத் தந்தை பீட்டா் ஆரோக்கியதாஸ் சாா்பில் விலைக்கு வாங்கி, அதே இடத்தில் இரு சிலைகளையும் வைத்து ஜெபம் செய்தனா்.