விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஏா் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது திருவெறும்பூரைச் சோ்ந்த யாழ்வேந்தன் (23) ரூ. 49.64 லட்சம் மதிப்புடைய 971 கிராம் தங்கத்தை பசையில் கலந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினா் யாழ்வேந்தனை கைது செய்து விசாரிக்கின்றனா்.