முகப்பு
திருச்சி

ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ளமது பாட்டில்கள் திருட்டு

திருச்சி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களைத் திருடிச் சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

திருச்சி: திருச்சி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களைத் திருடிச் சென்றனா்.

திருச்சி சோமரம்பேட்டை அருகேயுள்ள வியாழன்மேடு பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை ஞாயிற்றுக்கிழமை காலை ஊழியா்கள் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனா்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் சோமரசம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து பாா்த்தபோது ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →