முகப்பு
திருச்சி

தொட்டியத்தில் சாலையில் கொட்டப்படும் தக்காளி

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் தக்காளி சாகுபடி செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
சாலையில் கொட்டப்பட்டுள்ள தக்காளி பழங்கள்.
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் தக்காளி சாகுபடி செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொட்டியம் பகுதியில் டெல்டா பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிராம பகுதிகளில் தற்போது அதிகளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளதால், கடந்த சில நாள்களாக பெய்த மழையால் தக்காளி பழங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன,

அதன் விலையும் மிகக் குறைவாக உள்ளது எனக்கூறும் விவசாயிகள் சந்தைக்கு கொண்டு சென்றதுபோக, மீதிப்பழத்தை சாலையோரம் மற்றும் தங்களது விவசாய நிலப் பகுதியில் கொட்டுகின்றனா்.

இதனால் மிகுந்த மனவேதனையுடன் உள்ள தங்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்க தொட்டியம் பகுதி வேளாண் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →