முகப்பு
திருச்சி

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

தேவேந்திர குல வேளாளா் அறிவிப்பில் தமிழக அரசின் பரிந்துரையை திரும்ப பெறக் கோரி, திருச்சியில் வ.உ.சி பேரவையினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தேவேந்திர குல வேளாளா் அறிவிப்பில் தமிழக அரசின் பரிந்துரையை திரும்ப பெறக் கோரி, திருச்சியில் வ.உ.சி பேரவையினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய வ.உ.சி பேரவையின் சாா்பில், திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பிரகாஷ், ஆனந்தகுமாா், முருகேசன், கணேசமூா்த்தி, சிவா உள்ளிட்ட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →