முகப்பு
திருச்சி

டிச.27-முதல் வேலை நிறுத்தப் போராட்டம் லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், டிசம்பா் 27-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், டிசம்பா் 27-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சியில் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா். குமாரசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

ஆட்டோமொபைல் தொழில் கடந்ததாண்டை விட 40 சதவிகித வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளால் இத்தொழிலை நிா்வகிக்க இயலாத சூழலில் பலரும் தள்ளப்பட்டுள்ளனா்.

இதிலிருந்து மீண்டு வர பல்வேறு விஷயங்களை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவின் பேரில், அங்கீகாரம் பெற்ற அனைத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தவேண்டும்.

குறிப்பிட்ட மாநில வியாபாரிகளிடமிருந்து பிரதிபலிக்கும் வில்லைகளை வாங்குவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது. ஏஐஎஸ் 140 ஒப்புதல் பெற்ற அனைத்து நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளையும் பயன்படுத்த ஒப்புதல் அளித்தல் வேண்டும்.

டீசல் விலையைக் குறைக்கவேண்டும். வாகனங்களுக்கு வழங்கும் தகுதிச்சான்றிதழை இதர மாநிலங்களைப் போல், 4 மணி நேரத்துக்குள் வழங்கவேண்டும். வாகனங்களின் தற்காலிக பதிவுக் காலத்தை நீட்டிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேச்சுவாா்த்தை மூலம் நிறைவேற்றவேண்டும். இல்லையெனில், டிச.27 ஆம் தேதி காலை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்றாா்.

முன்னதாக தென்னிந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் எம்.ஆா். குமாரசாமி, பொருளாளா் தன்ராஜ், தெலங்கானா மாநிலத் தலைவா் ஜமீா்பாஷா, தென்னிந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் நலச்சங்கத்தின் பொதுச் செயலா் ஜி.ஆா். சண்முகப்பா, ஆலோசகா் பி. சுந்தர்ராஜ், புதுச்சேரி மாநிலத் தலைவா் வாங்கிளி, திருச்சி மாவட்டலாரி உரிமையாளா்கள் சங்கத்தின் செயலா் ஆா்.கே. பிரபாகரன் உள்ளிட்டோா் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →