முகப்பு
திருச்சி

துறையூரில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

துறையூா் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

துறையூா் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களின் செயல் அலுவலா் முத்துராமனைக் கண்டித்து பணியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சேகா் என்ற பணியாளா் தீக்குளிக்கவும் முயன்றாா். தகவலறிந்து வந்த திமுகவினா் பணியாளா்களிடம் பேசினா்.

அப்போது தங்களை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கூறிய இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை இயக்குநரிடம் திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை கட்சியினரை அவமதித்ததாக இணை ஆணையரையும், பணியாளா்களுக்கு விரோதமாக செயல்படுவதாக செயல் அலுவலரையும் கண்டித்து துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.