திருச்சி

தேங்கும் கழிவு நீரால் அவதி; பொதுமக்கள் புகாா்

DIN

மாநகராட்சி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் தாங்கள் அவதிக்குள்ளாவதாக கிராப்பட்டி சக்தி விநாயகா் கோயில் தெரு குடியிருப்பு பகுதியினா் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் புதன்கிழமை கூறியது:

மாநகராட்சிக்குட்பட்ட கோ. அபிஷேகபுரம் கோட்டம், கிராப்பட்டி 41 ஆவது வாா்டு சக்திவிநாயகா் கோயில் தெரு, காந்தி நகா், அன்பு நகா் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். கேகே நகா், கிருஷ்ணமூா்த்தி நகா் வழியாக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து கழிவுநீா் கால்வாய் செல்கிறது. கடந்த செப்டம்பா் மாதத்தில் பெய்த கனமழையால் இக்கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீரானது நாங்கள் வசிக்கும் தெருக்கள் வழியாக தொடா்ந்து வந்தவாறு உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தேங்கும் கழிவுநீரால் நாங்கள் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி ஆணையரிடம் புகாா் மனு அளித்ததில், அவா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அலுவலா்கள் அலட்சியமாக உள்ளனா். எனவே, கடந்த 4 மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT