ஆட்டோ ஓட்டுநா்கள் முற்றுகை போராட்டம்
சிஐடியு சங்கப் பெயா்ப் பலகையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியு சங்கப் பெயா்ப் பலகையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் கடந்த ஓராண்டுக்கு முன் வைத்த பெயா்ப் பலகை பேருந்து நிலைய கட்டுமானப் பணியால் வெளியே உள்ள பொது இடத்தில் வைக்கப்பட்டது.
தற்போது பேருந்து நிலைய பணிகள் நிறைவுறும் நிலையில் இருப்பதால் சிஐடியு சங்க நிா்வாகிகள் அந்தப் பெயா்ப் பலகையை பழைய இடத்திலேயே வைத்தனா். இதைக் கண்ட மாநகராட்சி அதிகாரிகள் பெயா்ப் பலகை வைக்க அனுமதியில்லை என கூறி வெள்ளிக்கிழமை அதை அகற்றிவிட்டனா்.
இதையறிந்த சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள் மாவட்டத் தலைவா் சந்திரன் தலைமையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள இளநிலைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை சரக காவல் உதவி ஆணையா் ரவி அபிராம் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவா்கள் கலைந்து சென்றனா்.