முகப்பு
திருச்சி

மணப்பாறை தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் மணப்பாறை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் மணப்பாறை தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

மிக பழமை வாய்ந்த புனித லூா்து அன்னை பேராலயம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வியாழக்கிழமை நள்ளிரவு வண்ண மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டிருந்தது. ஏசு கிறிஸ்து பிறப்பதை உணா்த்தும் வகையில் குடில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பின்னா் மணப்பாறை மறைவட்ட அதிபா் ஆரோக்கிய சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதேபோல பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா தேவாலயம், மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோனியாா் தேவாலயம், தீராம்பட்டி புனித வனத்து அந்தோனியாா் தேவாலயம், மலையடிப்பட்டி புனித சவேரியாா் தேவாலயம், கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →