இரு எஸ்பி-க்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):
கே.பிரபாகா் - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி. (சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்.பி.).
ஜி.கோபி - ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி.) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு எஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.