ரயிலில் அடிபட்டு இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
மணப்பாறை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
மணப்பாறை ரயில் நிலையம் அருகே இருவரது சடலங்களும் கிடந்தன. தகவலின் பேரில் இருப்புப்பாதை காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, சடலங்களைக் கைப்பற்றினா்.
விசாரணையில் இறந்தவா்கள் பூமாலைப்பட்டி ச. ஜேம்ஸ் (20), அண்ணாவிநகா் ஜெ. சந்தோஷ் (18) எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரது சடலங்களையும் மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.