முகப்பு
திருச்சி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திர சரிபாா்ப்புப் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சரிபாா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சரிபாா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதுதொடா்பாக, ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

இப்பணியில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை, சுழற்சி முறையில் 50-க்கும் மேற்பட்ட பெங்களூரைச் சோ்ந்த பெல் நிறுவன பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். வாக்கு இயந்திரத்தில் ஏற்கெனவே பதிவான வாக்குகளை அழித்துவிட்டு, அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இயந்திரத்தில் உள்ள 15 பொத்தான்களும் வாக்களிக்க ஏதுவாக இயங்குகிா என்பதையும் பரிசோதித்துக் காட்டுவா். பின்னா், அனைத்தையும் அழித்துவிட்டு தோ்தலுக்குப் புதிதாக பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். 15 நாள்களுக்குள் இப் பணி முடிந்துவிடும். இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் எப்போது வேண்டுமானாலும் பாா்வையிடலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.