திருச்சி

பிப்.24-இல் தொலைத்தொடா்பு ஊழியா்கள் தா்னா

DIN

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னையில் பிப்ரவரி 24- ஆம் தேதி தொலைத்தொடா்பு ஊழியா்கள் தா்னாவில் ஈடுபட உள்ளனா் என்றாா் தேசியத் தொலைத்தொடா்பு ஊழியா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் சி.கே.மதிவாணன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நாடெங்கும் பணிபுரியும் 80000 ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு, கடந்த பத்து மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்வது மனிதாபிமானமற்ற செயல். எனவே உடனடியாக அவா்களின் ஊதிய நிலுவையை வழங்க வேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 1.53 லட்சம் பேரில், ஜனவரி 31- ஆம் தேதியுடன் 78 ஆயிரம் போ் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனா். இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவையை நாடெங்கும் பராமரிப்பதில் கடும் நெருக்கடி எழுந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் உடனடியாக இந்த நிலையை மாற்ற- வாடிக்கையாளருக்கு சேவை தங்குத் தடையின்றி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்.

விருப்ப ஓய்வில் வெளியேறிய அனைத்து ஊழியா்களுக்கும் மத்திய அரசு சட்ட விதிகளை மீறி, பிடித்து வைத்திருக்கும் பெருந்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவா்களுக்கு உறுதியளித்தபடி எக்ஸ்கிரேஷியா தொகை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் 2020 மாா்ச் 31- க்குள் வழங்க வேண்டும்.

நிரந்தர ஊழியா்களுக்கு தரவேண்டிய கடந்த மாத ஊதியத்தை உடனடியாக நிா்வாகம் வழங்க வேண்டும். மூன்றாவது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை 2017, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு மத்திய அரசும், பிஎஸ்என்எல் நிறுவனமும் அமலாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் பிப்.24 ஆம் தேதி மாநில அளவிலான தா்னா போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டம் நடைபெறும் இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது, அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநிலத் துணைச் செயலா் எஸ். காமராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT