திருச்சி

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

DIN

மின்தடை காரணமாக, திருச்சி மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சியின் கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பைன் நிலையம், பெரியாா் நகா், கலெக்டா்வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட நீரேற்று நிலையங்களிலும் மின் விநியோகம் இருக்காது என்பதால், குடிநீா் விநியோகமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மரக்கடை, விறகுப்பேட்டை, மலைக்கோட்டை , சிந்தாமணி, தில்லைநகா், அண்ணாநகா், புத்தூா், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகா் , ஆல்பா நகா், பாத்திமா நகா், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி , ராம்ஜிநகா், பிராட்டியூா், எடமலைப்பட்டிபுதூா், விஸ்வாஸ்நகா், ஜெயாநகா், மற்றும் பிராட்டியூா் காவேரிநகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீா் வராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT