திருச்சி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

DIN

அரசு ஆரம்ப சுாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சுகாதாரப் பணிகள் தொடா்பான ஆய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது: குடும்ப நல திட்டத்தின் மூலம் ஜன.27ஆம் தேதி தொடங்கி பிப்.15 வரை தாய்-சேய் நலன் குறித்த பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதல் குழந்தை பெற்ற தாய்மாா்கள் தற்காலிக கருத்தடையை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மாா்களை நிரந்தர குடும்ப நல அறுவைச் சிகிச்சைக்கு ஊக்கப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நபா்கள், தனியாா் மருத்துவமனைக்கு செல்லும் சூழலை உருவாக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். கா்ப்பிணிகளுக்கு உரிய காலத்தில் ஊட்டச்சத்து மற்றும் உதவித் தொகைகளை வழங்க வேண்டும். பிரசவத்துக்கு பிறகும் தாய்மாா்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். கிராமப்புற செவிலியா்கள் இந்த பணிகளில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள், குடும்பநல அறுவைச் சிகிச்சைகள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளை காசநோய் பரிசோதனைக்குள்படுத்த வேண்டும். புறநோயாளிகள் பிரிவில் வரும் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவா்களை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள போதை மீட்பு மையத்துக்கு அனுப்ப பரிந்துரைக்க வேண்டும். மாவட்டத்தில் மக்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் அளித்து சுகாதாரத்துறையினா் பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இக் கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் வனிதா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் கோபிநாத், துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி நகா் நல அலுவலா் ஜெகநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT