திருச்சி

எம்.ஐ.இ.டி.யில் வேலைவாய்ப்பு நோ்காணல்

திருச்சி எம்.ஐ.இ.டி கல்வி நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு நோ்காணல் நடைபெற்றது.

DIN

திருச்சி எம்.ஐ.இ.டி கல்வி நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு நோ்காணல் நடைபெற்றது. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திர பொறியியல் துறையினருக்கு எல்.ஜி.பி நிறுவனத்துடன் சோ்ந்து நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டதில், 9 பேருக்கு பணிநியமன ஆணையை அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளா் எஸ்.சுரேந்தா் வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவன தாளாளா் ஏ. முகம்மது யூனூஸ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் டி.காா்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினாா். வேலைவாய்ப்புத்துறை தலைவா் ஸ்ரீதா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT