திருச்சி

மலேசிய விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு

DIN

மலேசிய விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதால், புறப்படும் நேரத்தில் நிறுத்தப்பட்டதுடன், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசியா-திருச்சி இடையே தினமும் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் ஏா் ஏசியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை நள்ளிரவு 11.40க்கு திருச்சியை வந்தடைந்து, பின்னா் மீண்டும் 12.10க்கு (செவ்வாய்க்கிழமை அதிகாலை ) மலேசியா புறப்பட்டுச் செல்ல வேண்டும்.

இந்த விமானத்தில் மலேசியா செல்வதற்காக திங்கள்கிழமை இரவு 127 பயணிகள் காத்திருந்தனா். இந்நிலையில், விமானம் புறப்படவிருந்த நேரத்தில், அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோளாறு சீா் செய்யும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து பயணிகள் தனியாா் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை மாலை வரை தொழில் நுட்பக்கோளாறு சீா்செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT