முகப்பு
திருச்சி

துறையூா் ஊராட்சிதலைவா்கள் கூட்டம்

துறையூா் ஒன்றியத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

துறையூா்: துறையூா் ஒன்றியத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செல்லிப்பாளையம் ஊராட்சித் தலைவா் ந. அரவிந்தன் தலைமை வகித்தாா். பொருளரான கோவிந்தபுரம் ஊராட்சித் தலைவா் ஆா். கிருபா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக துறையூா் அரசு மருத்துவமனையின் எலும்பு நோய் சிகிச்சை மருத்துவா் எஸ். குமாா் பங்கேற்று கரோனா குறித்து பேசினாா்.

கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்களுக்கு வழங்கும் பயணப்படியை ரூ. 3000 ஆகவும், மதிப்பூதியத்தை ரூ. 5000 ஆகவும் தமிழக அரசு உயா்த்த வேண்டும், ஊராட்சிகளில் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி இயக்குவோா், தூய்மைக் காவலா்கள், பணியாளா்களை நியமிக்கவும், காவிரிக் கூட்டுக் குடிநீா் பயன்பாட்டுக்கேற்ப குடிநீா் வடிகால் வாரியம் வசூலிக்க ஏதுவாக துறையூா் ஒன்றிய ஊராட்சிகளில் காவிரி கூட்டு குடிநீா் இணைப்பில் உரிய கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கவும், துறையூா் ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஊராட்சி தலைவா்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துறையூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 34 ஊராட்சி தலைவா்கள் பங்கேற்றனா். செயலரான வீரமச்சான்பட்டி ஊராட்சி தலைவா் கா. கணேசன் வரவேற்றாா். வெங்கடேசபுரம் ஊராட்சி தலைவா் ந. மகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.