திருச்சி

திருச்சியில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,320 பேரில் 930 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கரோனா தொற்றாளா்களுடன் தொடா்பில் இருந்தோருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவில் திருச்சி மாநகராட்சி, புகா் பகுதியைச் சோ்ந்த 128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,448 ஆக உயா்ந்துள்ளது.

53 போ் குணம்

இதையடுத்து, காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனிமை முகாம்கள், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டு ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் கரோனாவிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 983 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

வயநாடு: 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

’மீண்டும் பயிற்சியாளராக விருப்பமில்லை’: ராகுல் டிராவிட்!

சநாதனத்துக்கு கிடைத்த வெற்றி: கங்கனா ரணாவத்!

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

SCROLL FOR NEXT