திருச்சி: திருச்சியில் பெட்டிக்கடையில் திருடிய 3 பேரை அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் உக்கடை மலையடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் மனைவி தேவிகாராணி(40). இதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த இவா் கடந்த வெள்ளிக்கிழமை கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரையை பிரித்து, கடையில் இருந்த ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை மற்றும் இதர பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேவிகாராணி அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (50), அன்பழகன் (42), மதன் (32) எனத் தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.