முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவரை முசிறி போஸீஸார்சனிக்கிழமை கைது செய்தனா்.
முசிறி அருகேயுள்ள தண்டலைபுத்தூா் அய்யாற்றில் உள்ள தடுப்பணை அருகே மா்ம நபா்கள் மணல் திருடி செல்வதாக முசிறி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்க்கு முசிறி காவல் உதவி ஆய்வாளா் ராஜிவ்காந்தி மற்றும் போலீஸார் ரோந்து சென்றபோது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த தண்டலைபுத்தூா் சோ்ந்த பா.விக்னேஷ் (20),பா.விஜயக்குமாா் (34) மற்றும் ப.போஜராஜன் (19) ஆகியோரை பிடித்த போஸீஸார் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு இரண்டு இருசக்கர வாகனத்தில் இருந்த ஏழு மணல் மூட்டைகளுடன் இரண்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து முசிறி காவல்நிலையம் அழைத்து வந்து மேல் விசாரணை செய்து மூவரையும் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.