திருச்சி

பிளஸ் 1 தேர்வு: மாநில அளவில் திருச்சி 4ஆவது இடம்

DIN

பிளஸ் 1 தேர்வில் திருச்சி மாவட்டம் மாநில அளவில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

பிளஸ் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிந்தது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 256 பள்ளிகளைச் சேர்ந்த 14707 மாணவர்களும், 17416 மாணவிகளும் என 32183 பேர் தேர்வு எழுதினர். பிளஸ் 1 தேர்வு வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. அதில், திருச்சி மாவட்டம் 97.43 சதவீதம் மொத்தம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

தேர்வெழுதியர்களில் 16208 மாணவர்களும், 17148 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவிகளைவிட மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆரசுப் பள்ளிகளில் 9870 மாணவர்கள் தேர்வெழுதியதில் 9415 பேர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களில் தேர்வெழுதிய 142 மாணவர்களில் 139 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த இண்டு பிளஸ் 1 தேர்வில் திருச்சி மாவட்டம் 96.93 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில ஆளவில் 10 ஆவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT