முகப்பு
திருச்சி

திருச்சியில் பேருந்துகள் இயக்கம் 

திருச்சியில் பேருந்துகள் ஓடத் தொடங்கின. பிரிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 

Updated On : 1 ஜூன், 2020 at 10:44 AM
பகிர்:

திருச்சியில் பேருந்துகள் ஓடத் தொடங்கின. பிரிக்கப்பட்ட மண்டலங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 

பயணிகள் பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்படுகிறார்கள்
பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் கிருமிநாசினிகள் கொடுக்கப்பட்டது. ஏறத்தாழ 65 நாள்களுக்குப் பிறகு பேருந்து சேவை திங்கள்கிழமை காலை தொடங்கியது.  

வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 

Advertisement

பொது முடக்கம் காரணமாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், 65 நாட்களுக்கு பிறகு திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்டத்தில் 400 அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 

இப்பேருந்துகளும் முக்கிய வழித்தடங்களில் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. 

வெளியூர் பேருந்துகள் இடையில் நிற்காமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடையில் உள்ள ஊர்களுக்குப் பயணிகள் இருந்தால், அப்பகுதிக்குத் தனியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்குச் சுகாதாரத் துறையினர் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்கின்றனர். மேலும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குக் கையுறை வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல பேருந்தில் ஏறும்  பயணிகளையும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்கின்றனர். முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் ஏற அனுமதிக்கப்படுகிறது. 

பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் ஒருவரும்,  மூன்று பேர் அமரும் இருவரும் மட்டுமே அமருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. காலை நேரத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.