முகப்பு
திருச்சி

திருச்சியில் அரசு மருத்துவமனையில்: கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த  திருவள்ளூரைச் சேர்ந்த நபர் பலி

திருச்சியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூர் மாவட்டடத்தைச் சேர்ந்த நபர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 7 ஜூன், 2020 at 6:36 PM
கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூர் மாவட்டடத்தைச் சேர்ந்த நபர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இத்துடன் திருச்சியில் கரோனாவுக்கு பலியானோர் 2 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், வேம்பம்பட்டு, அய்யாத்தூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதான நபர் ஒருவர், தனது குடும்பத்தினருடன், பெரம்பலூரில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்வுக்காக கடந்த மே 27 ஆம் தேதி சென்றிருந்தார். 

அவருக்கு ஏற்கெனவே, இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், சர்க்கரை வியாதியும் இருந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இரு நாள்களாக காய்ச்சல் மற்றும் மூச்சிறைப்பு இருந்துள்ளது. காய்ச்சல் அதிகரித்ததை அடுத்து அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 1 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். ஆனால் நிலைமை மோசமானதை அடுத்து மறுநாள் 2 ஆம் தேதி மாலை திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர். இதனையடுத்து அவர் ஜூன் 3 ஆம் தேதி திருச்சி, அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மாயானத்தில் எரியூட்டப்பட்டது.

Advertisement

ஏற்கெனவே, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது கரோனாவுக்கு மேலும் ஒருவர் என மொத்தம் இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.