முகப்பு
திருச்சி

மீண்டும் தடை செய்யப்பட்ட தில்லைநகர்!

திதிருச்சி தில்லைநகர் 11ஆவது குறுக்கு சாலையானது மீண்டும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

திருச்சி தில்லைநகர் 11ஆவது குறுக்கு சாலையானது மீண்டும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு இரவு, பகலாக பாதுகாப்புக்கு காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் உடனடியாக மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி மாநகரின் பிரதான பகுதியாகவும், பெரு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியான தில்லைநகரில் 11ஆவது குறுக்குச் சாலை கடந்த ஏப்ரல் மாதமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 30 நாள்களுக்கு பிறகு தடை விலக்கப்பட்டது. இந்தநிலையில், தில்லைநகர் பகுதியானது மீண்டும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தொற்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருந்த நிலையில், மீண்டும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு முதல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட பகுதி என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிக்குள் வெளிநபர்கள் உள்ளே நுழையாத வகையிலும், இங்கிருந்து யாரும் வெளியே செல்ல முடியாதபடியும் கண்காணிக்கப்படுகிறது. தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளும் இந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்தப் பகுதி மக்களுக்கான காய்கனிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை அதே இடத்துக்கு வந்து விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 171 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் கோட்டத்தில் 16 பேர், கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 34 பேர், பொன்மலை கோட்டத்தில் 31 பேர், திருவரங்கம் கோட்டத்தில் 15 பேர் என மாநகரப் பகுதியில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 96 ஆக உள்ளது. இவர்களைத் தவிர, துவாக்குடி நகராட்சியில் ஒருவர், மண்ணச்சநல்லூரில் 6, மணப்பாறையில் 13, மருங்காபுரியி்ல 15, மணிகண்டம் 12, லால்குடி, திருவெறும்பூரில் தலா 5 பேர், அந்தநல்லூர், தொட்டியம், உப்பிலியபுரத்தில் தலா இருவர், முசிறியில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, புள்ளம்பாடி, துறையூரில் தலா 3 பேர், தா.பேட்டை, வையம்பட்டியில் தலா ஒருவர் என ஊரகப் பகுதிகளில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 171 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 120-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →