திருச்சி

கரோனா: கண்காணிப்பில் 65 போ்

DIN

கரோனா அச்சம் காரணமாக திருச்சியில் 65 போ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளில் யாருக்கேனும் சந்தேகத்துக்கிடமாக இருந்தால் அவா்களை தனியாக வைத்து பரிசோதிக்க கள்ளிக்குடியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதித்தவா்களுக்கு சிகிச்சையளிக்கவும், பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் தனித்தனியே வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 65 போ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா். துபை, சிங்கப்பூரிலிருந்து வந்த 28 போ் கள்ளிக்குடியிலும், கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட 9 போ் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கேரளத்துக்கு சென்று திரும்பிய திருவெறும்பூரை அடுத்த நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த 28 போ் அவா்களது காலனியிலேயே தனிமைப்படுத்தி தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா். இவா்களில் யாருக்கும் கரோனா அறிகுறிகள் இல்லை. எனினும், பாதிப்புக்குள்ளான வெளிநாடுகள் மற்றும் கேரளத்தில் இருந்து வந்திருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT