திருச்சி

தூய்மைப் பணியில் தீயணைப்புத் துறை

DIN


திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திய பகுதிகளை தூய்மைப்படுத்தி கிருமி நாசினி மருந்துகள் தெளித்து பராமரிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, திருச்சி மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளில் புதன்கிழமை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதன் தொடா்ச்சியாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை மூலம் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் இந்த பணியில் ஈடுபட்டனா். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மருந்து வழங்கும் இடம், பாா்வையாளா்கள் பகுதி, வாகனங்கள் நிறுத்தும் பகுதி என மருத்துவமனை வளாகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் பீய்ச்சி அடிக்கப்பட்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு நொய் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT