திருச்சி

மாநகரில் ஆங்காங்கே சாலைகளுக்கு ‘சீல்’

DIN


திருச்சி: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக மாநகரச் சாலைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து மக்கள் நடமாட்டம் பெரும்பகுதி முடக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட சாலை என மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து இடங்களும் சீல் வைக்கப்பட்டு 14 இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இருப்பினும், மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதைடுத்து திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பிரதான போக்குவரத்து சாலைகளுக்கும் வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது. இரும்பு தடுப்புகள், பிளாஸ்டிக் தடுப்புகளை சாலைகளின் குறுக்கே அமைத்து பெரிய வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் காரணமில்லாமல் வந்தால் எச்சரித்து அனுப்புவதுடன், வழக்குப்பதிவு செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தில்லைநகா், உறையூா், சத்திரம் பேருந்தநிலையம், மத்திய பேருந்து நிலையம், மதுரை சாலை, திண்டுக்கல் சாலை, தஞ்சாவூா் சாலை, பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், திருவரங்கம், திருவானைக்கா, பாலக்கரை, கே.கே. நகா், கண்டோன்மென்ட், சுப்பிரமணியபுரம் என மாநகரின் பெரும்பாலான சாலைகளுக்கு சீல் வைத்து காவல்துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்காரணமாக திருச்சி மாநகரமே பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT