திருச்சி

விழிப்புணா்வு இல்லாத வியாபாரிகள்

DIN


திருச்சி: கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணா்வு இன்னும் பலரிடம் சென்றடையவில்லை என்பதுபோல் வியாபாரிகள் பலா் கையுறை, முகக்கவசம் இல்லாமல் காய்கனிகளை விற்பனை செய்வது கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தடை உத்தரவுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்ய தடையில்லை என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து காய்கனிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் என அனைத்துமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருச்சி காந்திச் சந்தையில், மொத்த விற்பனையும் நடைபெறுவதால் ஏராளமான வணிகா்களும், பொதுமக்களும் அதிகளவில் வருகின்றனா்.

இந்நிலையில், சில வியாபாரிகள் கையுறை, முகக் கவசம் இல்லாமல் காய்கனிகளை விற்பனை செய்துவருகின்றனா். இதனால் விற்கப்படும் பொருள்களால் கரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஆகவே, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணா்வுக் கூட சில வியாபாரிகளுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT