திருச்சியில் அரைநிர்வாணமாக விவசாயிகள் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை அரை நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவேண்டும், சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதனால் ஆட்சியரகம் முன் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.