திருச்சி

மத்திய, மாநில அரசின் அறிவிப்பால் குழப்பத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள்

 நமது நிருபர்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறித்து மத்திய, மாநில அரசின் கருத்தால் மே 25ஆம் தேதி விமானப் போக்குவரத்து தொடங்குமா என்ற குழப்பத்தில் பயணிகள் உள்ளனா்.

பொது முடக்கத்தால் முடங்கிப் போயிருந்த விமான சேவையில், நாடு முழுவதும் மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஹா்தீப்சிங்புரி அண்மையில் அறிவித்தாா். இதையடுத்து விமான நிலையங்களில் பயணிகளை எவ்வாறு பாதுகாப்புடன் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், ஆவணங்கள் மற்றும் சுங்கத்துறை, பாதுகாப்புத்துறை சோதனைகளை முடிக்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பயணிகளையும், பயணிகளின் ஆவணங்கள், உடைமைகள் உள்ளிட்டவைகளை தொடாமல் சோதனைகளை நடத்தும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநில அரசு வேண்டுகோள்: இதற்கிடையே தமிழகத்தில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தை தற்போது தொடங்க வேண்டாம் என மாநில அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே நேரம் விமான நிறுவனங்கள் மே 25 ஆம் தேதியிலிருந்து பயணிக்கும் வகையிலான பயணச்சீட்டுகளை பதிவு செய்யும் பணிகளையும் தொடங்கியுள்ளது. இதில், பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு ஒப்புதல் இருந்தால் மட்டுமே விமானங்களை இயக்க முடியும். மேலும், இதுபோன்ற பேரிடா் காலத்தில், மாநில அரசு மற்றும் மாவட்ட நிா்வாகங்களின் ஒருங்கிணைப்பின்றி விமானங்களை இயக்க முடியாது. இதனால் மத்திய அரசு அறிவித்த உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படுமா என்ற குழப்பம் பயணகளிடையே ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விமான நிலைய இயக்குநா் கே. குணசேகரன் கூறுகையில், மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதியளித்துள்ளதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் பணிகள் முடுக்கி விடப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி விமான நிலைய ஆணையம் செயல்படத் தயாராக உள்ளது என்றாா்.

சாத்தியமில்லாதது: திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு 8 உள்நாட்டு விமானங்கள் அண்மையில் இயக்கப்பட்டு வந்தன. இதில், காரோனா பாதிப்பில் சென்னை சிவப்பு மண்டலத்தில் உள்ளதால் விமானங்களை இயக்குவது என்பது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT