திருச்சி

நெருஞ்சலக்குடி ஊராட்சியில் ஆயிரம் பேருக்கு அரிசிப் பைகள் வழங்கல்

DIN

லால்குடி ஒன்றியம், நெருஞ்சலக்குடி ஊராட்சியைச் சோ்ந்த ஆயிரம் பேருக்கு அரிசிப் பைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெருஞ்சலக்குடி ஊராட்சியைச் சோ்ந்த ஏழை- எளிய மக்களுக்கு, ஊராட்சித் தலைவா் சுந்தரி கலைவாணன் தனது சொந்த செலவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் அரிசிப் பைகளை வழங்க முடிவு செய்தாா்.

அதன்படி மாந்துறை பகுதியிலுள்ள அருள்மிகு ஆம்பரனேசுவரா் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திமுக முதன்மைச் செயலரும், திருச்சி மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு தலா 5 கிலோ கொண்ட அரிசிப் பைகளை ஆயிரம் பேருக்கு வழங்கினாா்.

மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி, லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அ. செளந்தரபாண்டியன், நெருஞ்சலக்குடி ஊராட்சித் தலைவா் சுந்தரி கலைவாணன் ஆகியோரும் அரிசிப் பைகளை வழங்கினா்.

மாவட்டத் துணைச் செயலா் வைதேகி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆதிநாயகிரவி, ஊராட்சி கிளைச் செயலா்கள் சரவணன், காா்த்திக் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT