முகப்பு
திருச்சி

திருச்சி அருகே சாலை விபத்து: காய்கனி வியாபாரி சாவு, மனைவி படுகாயம்

திருச்சி அருகே சாலை விபத்தில் காய்கனி வியாபாரி பலியானார்.

Updated On : 28 மே, 2020 at 4:26 PM
பகிர்:

திருச்சி அருகே சாலை விபத்தில் காய்கனி வியாபாரி பலியானார்.

திருச்சி மாவட்டம், குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் ச. ரவிச்சந்திரன் (43), இவரது மனைவி சங்கீதா (36) காய்கறி வியாபாரிகளான இருவரும் இன்று காலை, திருச்சியிலிருந்து மொத்த காய்கன் சந்தையில் வாங்கி வந்த காய் கனிகளை, திருச்சி – புதுக்கோட்டை சாலையில், குண்டூரில் உள்ள தங்களது கடையில், வேனிலிருந்து இறக்கி  வைத்துக கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தார். சங்கீதா படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். தகவலறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சங்கீதாவை மருத்துவமனையில் சேர்த்தனர். வேனை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஜான் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.