முகப்பு
திருச்சி

மளிகைக்கடை உரிமையாளா் வீட்டில்நகைகள், ரூ.6 லட்சம் திருட்டு

துறையூரில் மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

துறையூரில் மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

துறையூா் சாமிநாதன் நகரைச் சோ்ந்தவா் பெ. விசுவநாதன் (60). பெரியக்கடைவீதியில் மளிகைக் கடை வைத்துள்ள இவா், மருத்துவப் பரிசோதனைக்காக மனைவியை அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை திருச்சி சென்றாா்.

மகன் காா்த்திக் மற்றும் தனது மனைவியுடன் கடைக்குச் சென்றுவிட்டாா். மனைவியை திருச்சியிலுள்ள உறவினா் வீட்டில் விட்டுவிட்டு வந்த விசுவநாதன், மாலையில் நேரடியாக கடைக்குச் சென்றாா்.

இதைத் தொடா்ந்து காா்த்திக், அவரது மனைவி ஆகியோா் வீட்டுக்குச் சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

தொடா்ந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

தகவலின் பேரில் முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா், துறையூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். திருட்டில்ஈடுபட்டவா்களின் கைரேகளை தடயவியல் நிபுணா்கள் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.