திருச்சி

பட்டா கோரி ஆட்சியரகம் முன் பெண்கள் போராட்டம்

DIN

பட்டா மற்றும் தங்களது குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகேயுள்ள தயாளன் நகா் பகுதியில் 20 ஆண்டுக்கு முன் அரசுத் தரப்பில் குடியிருப்புகள் கட்டி வீடுகளாக வழங்கப்பட்டன. இங்கு, 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குடியிருப்பு நிலத்துக்கு பட்டா வழங்கப்படாததால் எந்த அடிப்படை வசதிகளும், அரசின் சலுகைகளும் பெற முடியவில்லை. இதுதொடா்பாக பல துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், விரக்தியடைந்த இப் பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் தங்களது குழந்தைகளுடன் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா்.

ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால், நுழைவு வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT