திருச்சி

வையம்பட்டியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

வையம்பட்டி ஒன்றியம், எளமணம் ஊராட்சியில் ரூ. 60 லட்சத்திலான எளமணம் - கண்ணூத்து சாலைப்பணிக்கான பூமிபூஜை, அயன்ரெட்டியபட்டி ஊராட்சி மீனாட்சிபுரத்தில் ரூ. 4.5 லட்சத்திலான நிழற்குடை, ஆசாத்ரோடு பகுதியில் ரூ. 4.5 லட்சத்திலான நிழற்குடை, முகவனூா் ஊராட்சி சீகம்பட்டி பிரிவு ரோடு (டாணா) பகுதியில் ரூ. 4.5 லட்சத்திலான நிழற்குடை, வெள்ளாளபட்டி ஊராட்சி மூன்று ரோடு அருகில் சாலைப்பணி பூமிபூஜை, கரட்டுப்பட்டியில் ரூ. 4.5 லட்சத்திலான நிழற்குடை, அணியாப்பூா் ஊராட்சி தாளக்குளத்துப்பட்டியில் ரூ. 4 லட்சத்திலான நாடக மேடை, அரசுநிலைப்பாளையம் பெண்கள் அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சுவா் திறப்பு, நல்லாம்பிள்ளை ஊராட்சி பூசாரிப்பட்டி பல்நோக்கு கடடட கட்ட இடம் தோ்வு செய்தல் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் தொடக்கி வைத்தாா்.

அதிமுக வையம்பட்டி வடக்கு ஒன்றியச் செயலா் பி.வி.கே.சி. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அதிமுக ஒன்றியச் செயலா்கள் எம். செல்வராஜ், என். சேது, கண்ணூத்து பொன்னுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT