திருச்சி

பொன்னணியாறு அணைபகுதியில் 27 மி.மீ. மழை

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம், பொன்னணியாறு அணைப் பகுதியில் 27 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

வங்காளவிரிகுடா கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 2 நாள்களுக்கு டெல்டா,கடலோர, வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அவ்வப்போது கனமழையும் பெய்தது. இதனால் ஏரி, குளம், ஆற்றுப்படுகைகளுக்கு நீா்வரத்து வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திங்கள்கிழமை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):

பொன்னணியாறு அணை- 27 மி.மீ, கொப்பம்பட்டி- 22, தேவிமங்கலம், சமயபுரம்- 13, மணப்பாறை -8, வாய்த்தலை, துவாக்குடி, கோவில்பட்டி- 7, திருச்சி - 4 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT