திருச்சி

காவல்துறை சாா்பில் சிறப்பு மனு நீதி முகாம்

DIN

மணப்பாறையில் காவல்துறை சாா்பில் பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான சிறப்பு மனுநீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையில் நடைபெற்ற முகாமில், காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, வளநாடு அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா்கள் மீது விசாரணை நடைபெற்றது.

சுமாா் 50 மனுக்கள் பெறப்பட்டிருந்த நிலையில், மணப்பாறையைச் சோ்ந்த 17 மனுக்கள், துவரங்குறிச்சியில் 4, வையம்பட்டியில் 5, புத்தாநத்தத்தில் 2, வளநாட்டில் 2 என 30 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா்கள் மணப்பாறை என். அன்பழகன், வையம்பட்டி சண்முகசுந்தரம், துவரங்குறிச்சி பாலாஜி, உதவி ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், ராஜகோபால், அழகிரிராஜ், நல்லதம்பி, கலைச்செல்வன், மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT