திருச்சி

கல்வி உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வித் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும் உடலியக்கக் குறைபாடுடையோா், பாா்வையற்றோா், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1000, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.3000, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ. 4000, இளங்கலை மற்றும் பட்டயப்படிப்புக்கு ரூ. 6000, முதுகலைக்கு ரூ. 7000 என கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இவா்களில் பாா்வையற்றோருக்கு கல்வி உதவித்தொகையுடன் வாசிப்பாளா் உதவித்தொகையாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ. 3000, இளங்கலை பட்டத்துக்கு ரூ.5000 மற்றும் முதுகலைக்கு ரூ.6000 சோ்த்து வழங்கப்படுகிறது.

தகுதியுள்ளோா் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுகல்வி பயிலும் நிறுவன சான்றொப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், கடந்தாண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்குப் புத்தக நகலுடன் விண்ணப்பித்துப் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0431- 2412590 எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT