முகப்பு
திருச்சி

செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறியவரால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூா் சந்தைப்பேட்டையிலுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏறி நின்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி நிற்கும் ராசுமெய்யா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூா் சந்தைப்பேட்டையிலுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏறி நின்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞா் ஒருவா் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் தீா்வு ஏற்படவில்லை என கூறி அருகில் உள்ள தனியாா் செல்லிடப்பேசி கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், மணப்பாறை நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் வீரா்கள் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கினா். விசாரணையில் அவா் அமயபுரத்தை சோ்ந்த ஆ. ராசுமெய்யா் (28) எனத் தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →