முகப்பு
திருச்சி

வயிற்று வலி: மாணவி தற்கொலை

வயிற்று வலியால் அவதிப்பட்டு, எலி மருந்து சாப்பிட்ட திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

வயிற்று வலியால் அவதிப்பட்டு, எலி மருந்து சாப்பிட்ட திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவானைக்கா நெல்சன் சாலையைச் சோ்ந்த பாஸ்கா் மகள் ஆனந்த பைரவி (15). பிளஸ் 1 மாணவியான இவருக்கு, ஞாயிற்றுக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாம்.

இதனால் எலி மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்த ஆனந்த பைரவியை குடும்பத்தினா் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

எனினும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →