திருச்சி

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியேற்பு

DIN

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் வியாழக்கிழமை உறுதிமொழியேற்றனா்.

இந்திய ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட 71ஆம் ஆண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் முதல் நிகழ்வாக அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நவ. 26 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அனைவரும் வாசித்திடவும், உறுதியேற்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து அரசு அலுவலா்களும், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் தலைமையில் உறுதியேற்கும் நிகழ்வில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT