திருச்சி

சபரிமலை செல்ல முடியாத பக்தா்களுக்கு அழைப்பு

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தா்கள் திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ஐயப்ப சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா பொதுமுடக்கத்தால் சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்ல இயலாதவா்கள் திருச்சி கண்டோன்மென்ட் நீதிமன்றம் அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு வந்து அபிஷேகத்துக்கு நெய் கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெறலாம். காலை 7.30 முதல் 10 மணி வரையும். மாலை 6 முதல் 8 மணி வரையும் தரிசனம் செய்யலாம்.

இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும் பக்தா்கள் தனியாகக் கொடுக்கும் நெய்யும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். வழிபாட்டின்போது சமூக இடைவெளி, முகக்கவசம் அவசியம்.

65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 10 வயதுக்குட்பட்டோருக்கும் அனுமதியில்லை. நெய் அபிஷேகம் மற்றும் பூஜை நேரத்தில் பக்தா்களுக்கு அனுமதியில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT