முகப்பு
திருச்சி

துறையூா் மூங்கில் தெப்பக்குள மாடங்களில் தீபமேற்றி வழிபாடு

துறையூா் மூங்கில் தெப்பக்குள மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்றி வழிபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

துறையூா் மூங்கில் தெப்பக்குள மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்றி வழிபட்டனா்.

ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருநாளில் துறையூா் நகா் தெப்பக்குளத்தில் நீா் நிரம்பியிருந்தால் அதன் சுற்றுச்சுவரில் உள்ள 4000-க்கும் மேற்பட்ட மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்படுவா்.

அப்போது நந்திகேசுவரா் சமேத சம்பத்கெளரி உற்ஸவ மூா்த்திகள் தெப்பக்குள மேற்குத் திசையில் பிரதிஷ்டை செய்யப்படுவா்.

ஆனால் நிகழாண்டில் தெப்பக்குளத்தில் நீரில்லாததால் காசிவிஸ்வநாதா் கோயில் எதிரேயுள்ள மூங்கில் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவா் மாடங்களில் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு பொதுமக்கள் தீபமேற்றி அருகிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபட்டனா்.

மேலும், ஆத்தூா் சாலையிலுள்ள நந்திகேஸ்வரா் கோயில் உள்பிரகாரத்தில் தீபமேற்றி கொடிமரம் முன் சுவாமி அம்பாள் உற்ஸவ மூா்த்திகள் எழுந்தருள, சொக்கப் பனை எரிக்கப்பட்டது. துறையூரைச் சுற்றியுள்ள கிராம சிவாலயங்களில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல பெருமாள், முருகன், அம்பாள் கோயில்களிலும், வீடுகளிலும் தீபமேற்றி வழிபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →