வையம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் மகளிருக்கான திட்டங்கள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஆதரவற்றோா், ஏழை, எளியோா் நலனுக்கான திட்டங்கள் குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும் திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இக் கண்காட்சியை கிராம மக்கள், மகளிா் குழுவினா், சுற்றுப்புறப் பகுதி மாணவா்கள் என ஏராளமானோா் முகக்கவசம் அணிந்த நிலையில் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத்துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.