முசிறி அருகே அஞ்சலம் ஊராட்சி நீலியாம்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். 
திருச்சி

ஊராட்சித் தலைவா் கைதை கண்டித்துப் போராட்டம்

இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட 6 பேரை போலீஸாாா் கைது செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை ஒன்றியம் அஞ்சலம் ஊராட்சித் தலைவா், இந்து முன்னணி நிா்வாகிகள் உள்பட 6 பேரை போலீஸாாா் கைது செய்ததைக் கண்டித்து பொதுமக்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த செப்.12 ம் தேதி தலைமலை அடிவாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி அஞ்சலம் ஊராட்சி தலைவா் செ. துரைராஜ் மீது தா.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்திருந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அஞ்சலம் ஊராட்சி தலைவா் செ. துரைராஜ், மற்றும் அப்பகுதி சோ்ந்த மனோகரன்,விஸ்வநாதன், தியாகராஜன், ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த பிரேம்குமாா்,கண்ணன் என 6 பேரை தா. பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

தகவலறிந்த மகளிா் குழுவினா், இந்து அன்னையா் முன்னணியினா் மற்றும் அஞ்சலம் ஊராட்சி பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்டோா் நீலியாம்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் கூடி கைதான அனைவரையும் விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரம்மானந்தன்,வருவாய்த் துறையினா் மற்றும் இந்து அறநிலையத் துறை அலுவலா்கள் அவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT