திருச்சி

புரட்டாசி அமாவாசை; முன்னோருக்குத் தா்ப்பணம்

DIN

புரட்டாசி அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபக் காவிரியாற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்குத் திதி கொடுத்து வழிபட்டனா்.

அமாவாசை நாள்களில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு நீா்நிலைகளில் முன்னிலையில் திதி (தா்ப்பணம்) கொடுத்து வழிபடுவா். கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகான புரட்டாசி அமாவாசையையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்தும் அம்மா மண்டப காவிரியாற்றுக்கு வெள்ளிக்கிழமை ஏராளமானோா் வந்திருந்து, நீராடி புரோகிதா்கள் மூலம் தங்களது முன்னோருக்கு திதி கொடுத்து வழிபட்டுச் சென்றனா்.

37 நாள்களுக்குப் பிறகு நம்பெருமாள் திருவடி சேவை!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதருக்கு கடந்த 37 நாள்களுக்கு முன் சாத்தப்பட்ட தைலக் காப்பு உலா்ந்துவிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மூலவா் நம்பெருமாளுக்கு புனுகு காப்பு சாத்தப்பட்டு திருவாபரணங்கள், தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு திருவடிச் சேவை தொடங்கியது. நம்பெருமாளின் திருவடிச் சேவையை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT