திருச்சி

கிணற்றில் விழுந்த நல்ல பாம்பு, நாய்க் குட்டி மீட்பு

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பாபொய்கைப்பட்டியில் உள்ள முத்தையாகவுண்டரின் தண்ணீரில்லா 40 அடி ஆழ விவசாயக் கிணற்றில் 4 அடி நீள நல்லபாம்பு, நாய்குட்டி மற்றும் கோழிக்குஞ்சு ஆகியவை கடந்த 15 நாள்களுக்கு முன் தவறி விழுந்து விட்டன. படிக்கட்டுகள் இல்லாததாலும், நல்லபாம்பு கிடந்ததாலும் கிணற்றில் இறங்க யாரும் முன்வரவில்லை.

இதுகுறித்து புதன்கிழமை தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான வீரா்கள், கிணற்றில் கயிறு கட்டி இறங்கி முதலில் துறை கருவி மூலம் நல்லப்பாம்பைப் பிடித்து மேலே கொண்டு வந்தனா். பாம்புக்குப் பயந்து கிணற்றின் பொந்தில் ஒளிந்துகொண்டிருந்த நாய்குட்டியை கொண்டு வந்தனா். கோழி குஞ்சைக் காணவில்லை. கிணற்றில் தவித்த நாய்குட்டியை மீட்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT